Sinusitis


நாசிப்புரையழற்சி (Sinus)
ரோஜா தைலம்.

 குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் உடலின் வெப்பத்தன்மையினால் ஜலதோஷம் ஏற்படும்.நீண்ட நாட்கள் இருந்தால், அது சைனஸாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருத்து தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். திடீரென மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். மது பழக்கம் ,புகை பழக்கம் இருந்தாலும் வரும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.
அத்தகைய பிரச்சனைகளை போக்க மருந்து.

பொருட்கள்:
நல்லெண்ணெய்    -70 மில்லி
ரோஜா இதழ்          -60 கிராம்
குப்புமேனி இலை -5 கிராம்
துளசி இலை           -5 கிராம்

செய்முறை:
  இலைகளையும் மற்றும் ரோஜா இதழ்களை விழுதாக அறைத்துக் கொள்ளவும்.செம்பு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி சூடானபிறகு விழுதை சிறுசிறு அடைகளாக எண்ணெய்யில் இடவும்.சிறு தீயில் காய்ச்சி எண்ணெய் பதத்தில் வடிகட்டி கண்ணாடி குப்பியில் அடைக்கவும்.

உபயோகிக்கும் முறை:
  காலை மாலை இரண்டு அல்லது நான்கு சொட்டுக்கள் மூக்கில் விட்டு மெதுவாக உறிஞ்சவும்.பிறகு10 நிமிடம் சூரிய ஒளியில் நிற்கவும். சைனஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
+91-8072819552

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...