CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.












 இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்டனாரின் கையேட்டில் இருந்து.

 இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அன்றே சித்த மருந்தை கூறியுள்ளார்.
இம்மருந்து வாத பித்த சிலேத்தும நோய்களுக்கு நாடி பார்த்து தாராளமாகத் தரலாம். ஒரு குற்றமும் செய்யாது குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேகம் அறிந்து தரவேண்டும்.

தேவையான பொருட்கள்:

1.பச்சை தேங்காய் ஓடு 3
2.தேவையான அளவு சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீர்
3.முற்றின தேங்காய் பால் தேவையான அளவு

செய்முறை:

  பச்சை தேங்காய் ஓடு 3 எடுத்துவந்து சங்கு பற்ப்பத்தின் தெளிவு நீரில் ஏழு நாட்கள் ஊறவைக்கவும். அதை நொறுக்கி கோழி புடம் போடவும்.

   புடம் ஆறிய பிறகு எடுத்து அக் கரியை சங்கு தெளிவு நீர்விட்டு அரைத்து நூறு விரட்டியில் புடமிடவும்.

   மறுபடியும் புடத்தில் இருந்து எடுத்து இரண்டு முற்றின தேங்காய் பால் விட்டு அரைத்து அகலில் சிலை செய்து இருநூறு விரட்டிகள் புடமிடவும். வெண்மையான சுண்ணம் கிடைக்கும். (வெண்மையான சுண்ணம் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் அதே பாவனை செய்யவும்)

உபயோகிக்கும் முறை:
  இந்தச் சுண்ணம் 4448 வியாதிகளைப் போக்கும்.

அனுபானம்:
 தேன்
 இளநீர்
ஆவின் பால்
வெண்சீரகம்
ஈஸ்வரமூலி கஷாயம்

அளவு:
  தேகத்தை கண்டு மருந்து தரவும்

பத்தியம்:
   இச்சா பத்தியம்

தீரும் நோய்கள்:

 நாள்பட்ட இரும்பல்
காசம்
நாள்பட்ட ஜுரம்
கிருமிகளால் ஏற்படும் அதிஜுரம்
உடல் பூட்டுகளில் வலி
நுரையீரல் தொற்று நோய்
சொரி
சிரங்கு
குஷ்டம்
அரையாப்பு
கிரந்தி

 இன்னும் பல நோய்களை குணமாக்க அதிசய மிக்க மாமருந்து.

இதை குரு மருந்துபோல் உபயோகப்படுத்தலாம்.

நன்றி:
சுபன் சித்தர்
பரம்பரை சித்த வைத்தியர்
+91-8072818552.

க்ஷீரபலா தைலம்


க்ஷீரபலாதைலம்

 







உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

பொருட்கள்:

நல்லெண்ணெய்
சடாமாஞ்சில்
குறுந்தொட்டி வேர்

செய்முறை:

 நல்லெண்ணெயில் சடாமாஞ்சில் சூரணம் குறுந்தொட்டி வேர் சூரணம் போட்டு தைலப் பதத்தில் காய்ச்சவும் பிறகு வடிகட்டி கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.

பயன்படுத்தும் முறை: 

காலை-மாலை சிறிதளவு தலைக்குத் தேய்க்கவும். தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேய்க்கவும். இதனால் உடல் குளிர்ந்து மன அமைதி பெறும் உயர் ரத்த அழுத்தம் குறையும்.


குறிப்பு :

எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும் சளி பிடிக்காது.


க்ஷீரபலாதைலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

பொருட்கள்:
நல்லெண்ணெய்
சடாமாஞ்சில்
குறுந்தொட்டி வேர்

செய்முறை:
நல்லெண்ணெயில் சடாமாஞ்சில் சூரணம் குறுந்தொட்டி வேர் சூரணம் போட்டு தைலப் பதத்தில் காய்ச்சவும் பிறகு வடிகட்டி கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.

பயன்படுத்தும் முறை:
காலை-மாலை சிறிதளவு தலைக்குத் தேய்க்கவும். தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேய்க்கவும். இதனால் உடல் குளிர்ந்து மன அமைதி பெறும் உயர் ரத்த அழுத்தம் குறையும்.


குறிப்பு :
எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும். சளி பிடிக்காது

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
(ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை)
+91-8072818552.

மின்சார தைலம்

மின்சார தைலம்













புதினா உப்பு 50 கிராம்
ஓம உப்பு         10 கிராம்
பூங்கற்பூரம்    10 கிராம்
சோடா உப்பு     5 கிராம்
பச்சை   கற்பூரம் 5 கிராம்

இவை அனைத்தும்  ஒரு    கண்ணாடிச் சீசாவிலடைத்து    குலுக்கி   வைத்தால்   தண்ணீர்  போலாகி விடும்.   பேரியோர்களுக்கு  அரை கோப்பை  வெந்நீரில்  இரண்டு சொட்டு  விட்டு உள்ளுக்கு கொடுக்கவும்.
குச்சியில்   பஞ்சு  சுருட்டி வெகு கொஞ்சமாய்  மருந்தைத் தொட்டுத்  தொண்டைக்குள்   தடவி விடவும்   .
ஒரு மணி நேரத்துக்குள்   வீக்கம் குறையும்  சளி கரைந்து விடும்   

குழந்தைகளுக்கு  ஒரு சங்கில்  வெந்நீர் விட்டு   ஒரு குச்சியால்   ஒரு சொட்டு மின்சார தைலத்தை  தண்ணீரில்  கலக்கி உள்ளுக்கு ஊற்றவும்  .  தொண்டை  அடைப்பு  உடனே  நீங்கும்

தினமும்  பல் துலக்கும் போது  மின்சாரதைலம் ஒரு சொட்டுடன் வெந்நீரில்  சொற்றுப்பைக்  கலக்கி   வாய்  கொப்பளித்து   வந்தால்  தொண்டையில் வரும்   பலவித.  வியாதிகளை  தடுக்கலாம்

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
(ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை)
+91-8072818552.

நவபாஷாணம்

நவபாஷாண லிங்கம்











ரசம்,
கந்தகம்,
லிங்கம்,
வீரம்,
பூரம்,
சிங்கி,
தாரம்,
வெள்ளை,
மனோசிலை,

   இவற்றை முறைப்படி சுத்தி செய்து மூலிகைச் சாற்றில் சுருக்கு தரவேண்டும். மற்றும் ஜெய நீரில் அரைத்து தேவையான சிலைகளாக செய்து புடமிட்டு கொள்ள வேண்டும்

இளநீர்,பால் அபிஷேகம் செய்து அதை தீர்த்தம் போல் குடித்துவர பல நோய்கள் தீரும்,குடும்பத்தில் நிலையான அமைதி,காய சித்தி,நவக்கிரக அருள்,வியாபார செழித்தோங்க,சர்வ கார்ய சித்தி,சர்வ மங்கல சித்தி,இதன் அதிர்வலைகள் நோய்களை போக்கும்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
(ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை)
+91-8072818552.

சிலாசத்து பற்பம்

சிலாசத்து பற்பம்






செய்முறை:
    சோற்றுக் காற்றாழை இரண்டாக பிளந்து சிலாசத்தை சிறு சிறு துண்டுகளாக வேத்தே கோணியில் சுருட்டி 300 விறட்டில் புடம் இடவும் வெளுக்காவிடில் முன் போல் புடம்.
ஆகாச நிறம் வரும் வரை.

சாப்பிடும் முறை:
1.  ஒரு அரிசி எடை வெண்ணெய் அல்லது குங்கிலிய வெண்ணெயில் காலை மாலை.
2.  இளநீரில் ஒரு சிட்டிகையிட்டு ஒரு இரவு வைத்து காலையில் சாப்பிடவும்

தீரும் நோய்:
இரண்டு அல்லது மூன்று வேளைகளில் எப்படிபட்ட வெள்ளை, வெட்டை, மாகா வெட்டை தீரும்.

பத்தியம்:
புளி,காரம் கூடாது.

சுபன் சித்தா.
ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை.
பேசி: 8072818552.

யோனிப்புண்களுக்கு

யோனிப்புண்களுக்கு





 பஷ்ஷிகள் விரும்பாத பழம்
வெட்டினால் சாகாத கிழங்கு
குழந்தைகள் விரும்பாத கொள்ளு
நரியார் விரும்பாத நாரி
இத்துடன் அருகன் வேர் சேர்த்து
சூரணம் செய்து சம எடை
சர்க்கரை கலந்து (பனைவெல்லம்) தேனில் சாப்பிடவும்.

  எங்கள் சிறியபாட்டணாரின் கையேட்டில் இருந்தது.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
Cell:- +91-8072818552

குமரிசாக்லெட்

குமரிசாக்லெட்

மருந்து செய்முறை.

தேவையான பொருட்கள்:
1.சித்தாமணக்கெண்ணெய் -1லிட்டர்
2.சோத்து கத்தாழை சோறு  -1/2 கிலோ
3.தரமான பனங்கல்கண்டு  -1/2கிலோ
4.வெள்ளை வெங்காய சாறு  -200 மில்லி
5.சீரகம்                                    -50கிராம்

செய்முறை:
       
            சோற்று கற்றாழை மேல் தோல் சீவி சோறு எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பனங்கல்கண்டை  அரைத்து சலித்து பொடித்து வைக்கவும்.சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.வெள்ளை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வைக்கவும்.
            சித்தாமணக்கு எண்ணெய்யை அடுப்பில் வைத்து  பொடித்து வைத்துள்ள பனங்கல்கண்டு, சீரகம் மற்றும் கற்றாழை சோறு மற்றும் வெள்ளைவெங்காய சாறு இவைகளை எண்ணெய்யுடன் கலந்து எரித்து வரவும்.நீர் சுண்டி மெழுகு பதம் வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி வைக்கவும்.

தீரும் நோய்கள்:

1.நவமூலமும் தீரும்.

2.அல்சர், ரணம்,வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, குடல் புண்கள் தீரும்.

3.பசியின்மை, புளியேப்பம்,பொருமல், மந்தம் இவை தீரும்.

அளவு:   காலை மாலை பதினைந்து மி.லி அளவு சாப்பிட வேண்டும்.உடல் பலத்திற்கு தக்கபடி அளவை  கூட்டிக் குறைத்து சாப்பிட வேண்டும்.
மேலும்,
4.மேக ரோகம் அதனால் ஏற்பட்ட பலவீனம்.

5.நீர்கசியும் கிரந்தி,அரிப்பு, தினவு, எரிச்சல்.

6.உஷ்ணத்தினால் மஞ்சள்,சிவப்பு நிறங்களில் நீர் போதல்.

7.தாது இழப்பு, விந்து நட்டம், விந்து நீர்த்தல், பலவீனம் , விந்து முந்துதல் தீர்ந்து  விந்து தடிப்பாகும்.

8.அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளின் அக,புற ரணங்கள், சீழ் வடிதல் தீரும்.

9.மிக அற்புதமான மலச்சிக்கல் நிவாரணி.

10.தொடர்ந்து கொடுத்து வர குழந்தைகளின் உடல் தேறும்.

அளவு:
காலை மாலை ஐந்து மில்லி அளவு கொடுத்து காரம், புளி நீக்க வேண்டும்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்.

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...